Publish Date: Thu, 24 Mar 2022 (10:06 IST)
Updated Date: Thu, 24 Mar 2022 (10:07 IST)
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி கவுனிசிலர் ஒருவர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விரைவில் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டன இரு கட்சிகளும்.
இந்நிலையில் டெல்லியின் பூங்கா நகர் பகுதியில் குப்பைகள் எடுக்கப்படாமல் அடைத்துக் கிடந்த சாக்கடைக்குள் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலரான ஹசீப் உல் ஹசன் இறங்கி சுத்தம் செய்துள்ளார். அவர் சுத்தம் செய்ததையும் அதற்குப் பிறகு அவருக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்ததையும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.