Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

அடுத்து அரசியலில்... மாநிலங்களவை எம்.பி. ஹர்பஜன் சிங்..?

Advertiesment
Harbhajan Singh
, திங்கள், 21 மார்ச் 2022 (13:45 IST)
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 59 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை என்ற நிலையில் 92 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி வெற்றி பெற்றது.
 
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றியதால் அம்மாநிலத்தில் இருந்து அந்த கட்சிக்கு 6 மேல் சபை எம்.பி. உறுப்பினர்கள் புதிதாக கிடைக்கிறார்கள். பஞ்சாப்பில் அடுத்த மாதம் 5 மேல் சபை உறுப்பினர்களின் எம்.பி. பதவி காலியாகிறது. 
 
இதையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்ப ஆளும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, சந்தீப் பதக் ஆகியோர் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெரியாது.. தெரியாது.. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்!