Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாயில் பாம்பு கடித்ததில் இளைஞர் பலி.! விபரீதத்தில் முடிந்த ரீல்ஸ்.!!

Advertiesment
Snake Death

Senthil Velan

, சனி, 7 செப்டம்பர் 2024 (17:08 IST)
தெலங்கானாவில் ரீல்ஸ்காக வாயில் பாம்பை வைத்து சாகசம் செய்த இளைஞர், அந்த பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தை சேர்ந்தவர் கங்காராம். இவர் ஒரு பாம்பு பிடி வீரர். இவரது மகன் சிவ ராஜூவுக்கும் பாம்பு பிடிக்க கற்றுக் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில் சிவ ராஜூ 5 அடி நீளமுள்ள பாம்பின் தலையை தன் வாயில் வைத்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் பாம்பை வாயில் வைத்து கடித்து கொண்டே ஸ்டைலாக தலைமுடியை வாரி போஸ் கொடுத்துள்ளார். 
 
அப்போது வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் போது பாம்பு கடித்ததை உணராத இவர், விஷம் தலைக்கேற சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ரீல்ஸ் முகத்தால்  பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சி ஆரம்பித்த நடிகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.! யாரை குறிப்பிட்டு சொல்கிறார் நாராயணசாமி.?