Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருடனை பிடிக்க முயன்றபோது ரயிலில் சிக்கி உயிரிழந்த நபர்!

Advertiesment
train

Sinoj

, சனி, 30 மார்ச் 2024 (20:24 IST)
புனேயைச் சேர்ந்தவர் பிரபாஸ் (24).இவர் தனியார் வங்கியின் காசாளமாகப் பணியாற்றி வந்தார். 
 
சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக மும்பை வந்திருந்தார். சம்பவ தினத்தன்று, புனே செல சித்தேஷ்வர் ரெயிலில் பயணம் செய்தார்.
 
அப்போது,  அவர் வாசல் அருகே நின்றபடி செல்போனில் பணம் செய்ததாக தெரிகிறது. ரயில் கல்யாணை தாண்டி விட்டல் வாடி ரெயில் நிலையம் அருகே மெதுவாகச் சென்றபோது,. அவர் அருகில்  நின்ற ஆகாஷ் ஜாதவ்(27). என் வாலிபர் திடீரென்று அவரிடம்  செல்போனை பறிவித்துவிட்டு  ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்.
 
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாஸ் திருடனைப் பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்தார்.  அப்போது ரயிலில் சிக்கிய பிரபாச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து, போலீஸார், திருடன் ஆகாஷ் ஜாதவை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து அம்பிவிலி ரயில் நிலையத்தில் போலீஸார் அவரை கைது செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி விமர்சனம்!