Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி விமர்சனம்!

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற  நீதிபதி விமர்சனம்!

Sinoj

, சனி, 30 மார்ச் 2024 (20:18 IST)
பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? என்று உச்ச நீதிமன்ற  நீதிபதி விமர்சித்துள்ளார்.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான   பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக அரசு திடீரென்று பணமதிப்பிழப்பு  நடவடிக்கை மேற்கொண்டது.
 
இதுகுறித்து,  எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட பல்வேறு  எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது விமர்சனம் தெரிவித்தனர்.
 
மத்திய பாஜக அரசின் இந்த  பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி   உச்ச  நீதிமன்ற நீதிபதி   நாகரத்னா விமர்சனம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: 2016-ல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அப்போதைய நிதியமைச்சருக்குக் கூட தெரியாது என்கிறார்கள் சிலர். 
 
கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற பணமதிப்பிழப்பு ஒரு நல்ல வழி என்று முன் நினைத்திருந்தேன். அதன் பிறகு என்ன ஆனதே என்பதே தெரியவில்லை. மேலும், 98 சதவீத 500,1000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிய நிலையில்,  அதன் பிறகான வருமான வரி என்னானது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள்- அசாம் முதல்வர்