Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக - பாஜகவினர் மீது தடியடி.! உதகையில் பதற்றம்..!!

Advertiesment
Police Attack

Senthil Velan

, திங்கள், 25 மார்ச் 2024 (15:22 IST)
உதகையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுடன் வந்த அதிமுக பாஜக தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது.
 
மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜக வேட்பாளர் எல்.முருகன் ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொண்டர்களுடன் பேரணியாக வந்தனர். 
 
நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடந்து அதிமுக பாஜக தொண்டர்கள் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

 
ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாததால் ஆத்திரமடைந்த போலீசார் அதிமுக பாஜக தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு- திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து லைட், ரேடியோ அமைத்த திமுகவினர்!