நாடாளுமன்ற வளாகத்தில் கத்தி என்ற ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற வளாகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனுமதி பெறாதவர்கள் யாரும் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முடியது
இந்த நிலையில் சற்றுமுன்னர் பாராளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைய முயன்றதாக பாதுகாப்பு படை போலீசார்களுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், கத்தியுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும், அவர் தீவிரவாதியா? என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
கைது செய்யப்பட்ட மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் 'தேரா சச்சா சவுதா’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை