Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரையரங்கத்தில் பாப்கார்ன் லாபத்தில் பங்கு வேண்டும்: பிரபல இயக்குனர் கோரிக்கை

திரையரங்கத்தில் பாப்கார்ன் லாபத்தில் பங்கு வேண்டும்: பிரபல இயக்குனர் கோரிக்கை
, புதன், 28 ஆகஸ்ட் 2019 (21:43 IST)
திரையங்குகளில் பாப்கார்ன், காபி விலையை அதிகமாக விற்பனை செய்யும் திரையரங்குகள் அந்த அதிகப்படியான லாபத்தை தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் என இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். ரஜினி நடித்த எஜமான், கமல் நடித்த சிங்காரவேலன், விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர், கார்த்திக் நடித்த கிழக்குவாசல், பொன்னுமனி. போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்
 
சென்னை வடபழனியில் 'எவனும் புத்தனில்லை' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது: திரையரங்குகளில் பல மடங்கு விலைக்கு விற்கப்படும் பாப்கார்ன், காபி விற்பனையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும். இதனை புத்தனாக இல்லாமல் அடித்து கேட்க வேண்டும் என்றார்
 
மேலும் ஹாலிவுட் திரை உலகில் பழைய படங்களை இயக்கியவர்களுக்கு தற்போது வரை ராயல்டி கிடைக்கின்றது. அதேபோல் பழைய தமிழ் படங்களை உருவாக்கிய இயக்குனர்களுக்கும் ராயல்ட்டி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ் சினிமாவிற்கு முதல் எதிரியே நடிகர்களுக்கு வழங்கப்படும் கேரவன் தான் என்றும் ஆர்.வி உதயகுமார் விமர்சித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுடன் நேருக்கு நேராக மோதும் ஜிவி பிரகாஷ்!