Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

65 லட்சம் வரதட்சணை: மனைவியை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய கணவன்

Advertiesment
ஆந்திரா
, புதன், 5 செப்டம்பர் 2018 (15:18 IST)
ஆந்திராவில் 65 லட்சம் வரதட்சணையாக பெற்ற நபர் ஒருவர் தனது மனைவியை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம்  கர்னூல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவனுக்கு சமீபத்தில் திரிவேணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அவனுக்கு திருமணத்தின் போது மணமகள் வீட்டார் 55 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை வரதட்சணையாக கொடுத்தனர்.
 
இந்நிலையில் அந்த கொடூரன் திரிவேணியை நிர்வாணமாக போட்டோ எடுத்ததுடன், உன்னுடன் வாழ முடியாது. ஆகவே நான் சொல்லும் விவாகரத்துப் பத்திரத்தில் நீ கையெழுத்திட வேண்டும் என்றும், அதற்கு மறுத்தால் உன் நிர்வாணப் போட்டோவை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதற்கு அந்த அயோக்கியனின் பெற்றோரும் உடந்தை.
 
இந்நிலையில் திரிவேனி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தான் கொடுத்த 55 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை, தனது படிப்பு சான்றிதழ்களை பெற்றுத் தரும்படி கோரிக்கை விடுத்தார்.
 
புகாரின் பேரில் போலீஸார் அந்த அயோக்கியன் ராஜேந்திர பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மக்களின் போராட்டத்தையும், அடங்கா சினத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்: மு.க.ஸ்டாலின்