Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனிக்குடித்தனம் வர மறுத்த கணவன் - விரக்தியில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

Advertiesment
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவன் - விரக்தியில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
, செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (14:29 IST)
கடலூரில் இளம்பெண் ஒருவர் தனது கணவன் தனிக்குடித்தனம் வர மறுத்ததால், மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் மாலதி(32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 
திருமணம் முடிந்த பின்னர் மாலதி தனது கணவர், மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார். மாலதி ரவிசங்கரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு ரவிசங்கர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் மாலதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.
 
இந்நிலையில் வீட்டில் யாருமில்லா நேரத்தில் மாலதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாக 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய் குரைச்சுட்டே இருக்கு, தூங்க முடியல: லாலுபிரசாத் குமுறல்