மணப்பெண் அழகாக இல்லை - புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (07:27 IST)
போட்டோவில் இருந்தது போல் மணப்பெண் இல்லை என்பதால் கல்யாணமான புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்து  அந்த பெண்ணின் போட்டோவை ஷேக் மைதீனிடம் காண்பித்துள்ளனர். போட்டோவை பார்த்த ஷேக் பெண் அழகாக இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் அவருக்கு கடந்த 2 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சற்று நேரத்தில் ஷேக் மைதீன் தனது பெற்றோரிடம் சென்று அந்த பெண், போட்டோவில் பார்த்தது போல் அழகாக இல்லை என்றும், மேக்கப் போட்டு தம்மை ஏமாற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார். 
பின்னர் தனது நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியே சென்ற ஷேக், தனது நண்பரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
அழகு என்பது நிறத்தில் இல்லை மனதில் இருக்கிறது என புரிந்து கொள்ளாமல் தற்கொலை செய்து கொண்ட இந்த நபரை என்ன சொல்வெதென்றே தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments