Publish Date: Tue, 04 Sep 2018 (09:23 IST)
Updated Date: Tue, 04 Sep 2018 (09:27 IST)
மதுரவாயலில் நடிகரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நடிகர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலங்கள் நடைபெற்றுக்கொண்டே வருகிறது. அவ்வாறு அவரது குடும்பத்தாரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்(32). சித்தார்த் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.. இவரது மனைவி ஸ்மிரிஜா(35). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மதுரவாயலில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது அறைக்கு சென்று தூங்க சென்ற ஸ்மிரிஜா, நேற்று காலை அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ந்துபோன சித்தார்த் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்மிரிஜா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் ஸ்மிரிஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.