Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

Advertiesment
மதுரை மீனாட்சி அம்மன்

Siva

, செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (07:25 IST)
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போலவே, தெலுங்கானாவில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த கோவிலை பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நான்கு வாயில்களிலும் நான்கு பிரம்மாண்டமான ராஜகோபுரங்கள் அமைந்துள்ளன. மேலும்,  மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி தாமரை வடிவில் மதுரை மாநகரம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்தான், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பழமையான ஒரு கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போலவே வடிவமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  வாரங்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலை பிரம்மாண்டமாக புதுப்பிக்க வேண்டும் என்றும், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மீனாட்சி கோவில் வடிவில் அமைக்க வேண்டும் என்றும், மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து, கோவிலை சுற்றி மாடவீதிகள் அமைக்கும் பணி ரூ.100 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மேலும், நான்கு பிரம்மாண்டமான ராஜகோபுரங்களை அமைப்பதற்காக ரூ.1000 கோடி வரை செலவிடும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றும், அதனை ஆய்வு செய்து கொண்டே, அந்தக் கோவிலை போலவே இக்கோவில் கட்டப்படும் வகையில், இன்ஜினியர்கள் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு உள்ள பக்தர்கள் ஆச்சரியத்துடன் கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவு திட்டமா?