Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையின் பீடி பழக்கத்தால் பறிபோன பிஞ்சு உயிர்! ஆவேசமான தாய் செய்த செயல்!

Prasanth K
புதன், 18 ஜூன் 2025 (08:48 IST)

கர்நாடகாவில் தந்தையின் பீடி பழக்கத்தால் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவின் மங்களூர் டவுன் பகுதியில் லட்சுமி தேவி என்பவரும், அவரது கணவரும், 10 மாத குழந்தை அனீஷ் குமாருடன் வாழ்ந்து வந்துள்ளனர். பீகாரை சேர்ந்த லட்சுமி தேவியின் கணவர் திருமண அலங்கார பணியாளாக வேலைபார்த்து வந்துள்ளார்.

 

அவருக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. வீட்டில் 10 மாத குழந்தை உள்ள நிலையில் பீடி புகை குழந்தைக்கு ஆகாது என்றும், வீட்டுக்குள் புகைப்பிடிக்க வேண்டாம் என்றும் லட்சுமி தேவி அவரது கணவரை பலமுறை கெஞ்சியுள்ளார். ஆனால் அவரது கணவர் வீட்டிற்குள்ளேயே பீடி குடிப்பதும், மீத துண்டை வீட்டிற்குள்ளேயே போட்டுச் செல்வதுமாக இருந்து வந்துள்ளார்.

 

சம்பவத்தன்று அவ்வாறு அவர் வீசிய பீடித்துண்டை குழந்தை எடுத்து விழுங்கிய நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை இறந்து போனது.

 

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி தேவி தனது கணவர் மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தான் எச்சரித்தும் தனது கணவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் பீடி குடித்ததே குழந்தை மரணத்திற்கு காரணம் என்றும், அதற்காக தனது கணவனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்