Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 லட்சம் கொடுத்து எல்லோரையும் அம்பானி ஆக்க முடியாது - பாஜக தலைவரின் சர்ச்சைப் பேச்சு

15 லட்சம் கொடுத்து எல்லோரையும் அம்பானி ஆக்க முடியாது - பாஜக தலைவரின் சர்ச்சைப் பேச்சு
, புதன், 18 ஜூலை 2018 (11:40 IST)
மோடி சொன்னவாறு 15 லட்சத்தைக் கொடுத்து எல்லாரையும் அம்பானி ஆக்க முடியாது என பாஜக தலைவர் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2013 பாராளுமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் அனைத்தும் மீட்கப்படும் என்றும், மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
 
ஆனால் மோடி பதவியேற்று 4 ஆண்டுகள் ஆகியும், அவர் அறிவித்த 15 லட்சம் மக்களின் வங்கிக் கணக்கிற்கு போய் சேரவில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய  ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் மதன்லால் சைனி, பிரதமர் ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது.
 
15 லட்சம் தருவேன் என்றால் அதற்கான பணத்தை மக்களின் கையில் ரொக்கமாக தருவேன் என்று அவர் சொல்லவில்லை. 15 லட்சத்தை கொடுத்து எல்லோரையும் அம்பானியாக ஆக்க முடியாது. மோடி நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளது.
 
அதேபோல் ராஜஸ்தானில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதற்காக எல்லோருக்கும் அரசு வேலை வழங்கிவிட முடியாது என மதன்லால் தெரிவித்துள்ளார்.
 
மதன்லாலின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்று செல்போன் பறிப்பு - 4 கி.மீ துரத்தி பிடித்த வாலிபர்