Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 வயது பள்ளி மாணவன் மாரடைப்பால் மரணம்

Advertiesment
keerthanan
, திங்கள், 9 ஜனவரி 2023 (17:46 IST)
கர்நாடக மாநிலத்தில், மாரடைப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கூடுமங்களூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மஞ்சாச்சாரியின் மகன் கீர்த்தனன்  அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை அவர் பள்ளி முடிந்து தன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், தன் பெற்றோரிடம் தனக்கு நெஞ்சி வலிப்பதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை இரவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் படித்து வந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செனகல் நாட்டில் பேருந்து விபத்து- 40 பேர் பலி