செனகல் நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள முக்கிய நாடான செனகலில் மத்திய காஃப்ரைன் என்ற பகுதியில் தமனி சாலையில், இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 40 பேர் பலியானதாகவும், 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இந்த விபத்திற்கு ஓட்டுனரின் கவனக் குறைவுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏற்பட்ட பெரிய விபத்து இது என தகவல் வெளியாகிறது.
மேலும், பயணிகள் சென்ற பேருந்தின் டயர் வெடித்து பேருந்து பாதையில் இருந்து விலகி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.