Publish Date: Fri, 02 Dec 2022 (17:02 IST)
Updated Date: Fri, 02 Dec 2022 (17:04 IST)
சென்னை புழல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சாகுல் மீரான் என்பவரும் அடைக்கப்பட்டு இருந்தார்
அவர் திடீரென்று நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறியதை அடுத்து அவரை சிறை அதிகாரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
அப்போது அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.