Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 71 வயது இந்தியப் பெண்: கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பியதால் பரபரப்பு..!

Advertiesment
காவலில் வைக்கப்பட்ட

Mahendran

, சனி, 27 செப்டம்பர் 2025 (18:20 IST)
அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட ஹர்ஜித் கவுர் என்ற 71 வயது இந்திய பெண், தான் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது கைவிலங்கிடப்பட்டதாகவும், கால்கள் கட்டப்பட்டதாகவும், சைவ உணவு மறுக்கப்பட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 
 
1991ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த ஹர்ஜித் கவுர், 2012ஆம் ஆண்டு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் அவரது நாடுகடத்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. 
 
நான் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் எனது வருகையை பதிவு செய்ய செல்வேன். செப்டம்பர் 8 அன்று என்னை கைது செய்தார்கள். எந்த காரணமும் சொல்லவில்லை, என் குடும்பத்தினரை கூட சந்திக்க அனுமதிக்கவில்லை.
 
நான் கைது செய்யப்பட்டபோது, மூன்று பேர் என்னை சூழ்ந்து கொண்டு என்னை ஒரு குளிர் அறையில் அடைத்தனர். அறை மிகவும் குளிராக இருந்தது, போர்வைகூட கொடுக்கவில்லை. காலையில், வேறு இடத்திற்கு அழைத்து சென்றார்கள், அப்போது என் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தன
 
"டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.  10 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பிறகு, அரிசோனாவுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்பப்பட்டதாக கவுர் கூறினார். 
 
டெல்லியில் தரையிறங்கியதும் கவுர் கண்ணீர்விட்டு, "இவ்வளவு காலம் அங்கு வாழ்ந்த பிறகு, திடீரென இப்படி தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவது, இதைவிட இறந்து போவது மேலான என்று கதறி அழுதார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லடாக்கில் கைது செய்யப்பட்ட சோனம் வாங்க்சு பாகிஸ்தானுடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!