Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 மத்திய அமைச்சர்களுக்கு ராஜ்ய சபா தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக.. என்ன காரணம்?

Advertiesment
மக்களவை

Siva

, வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:23 IST)
15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதை அடுத்து இந்த இடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 27 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. 
 
தேர்தல் தினத்தில் வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்தது. 
 
இதில் பாஜக சார்பில் 7 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. அவர்கள் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல்தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் ஆவர்.
 
இந்த நிலையில் மேற்கண்ட 7 அமைச்சர்களுக்கும் வரும் மக்களவை தேர்தலில் பாஜக தலைமை வாய்ப்பளிக்கும் என கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ் அதிகாரி மனைவியிடமே சில்மிஷம் செய்த போதை ஆசாமி.. தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு..!