மக்களவை தேர்தலில் மூன்று தனித் தொகுதிகளும், ஒரு பொது தொகுதி என நான்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டி ஆர் பாலு தலைமையிலான திமுக தேர்தல் குழுவினருடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியாளிடம் பேசிய அவர், தாங்கள் போட்டியிட விரும்பிய தொகுதிகளுக்கான பட்டியலை திமுக தேர்தல் குழுவிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
தனித் தொகுதிகள் மூன்று, பொது தொகுதி ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள்b கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.
மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.