இந்தியா – மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை அதிகமாக சரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இன்றைய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல், கிட்டத்தட்ட நேற்றைய புள்ளிகளில் தான் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 26 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 80,323 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 349 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நேற்று பங்குச்சந்தையில் பெரிய ஏற்ற இறக்கம் இல்லாத நிலையில், கிட்டத்தட்ட அதே நிலை தான் இன்றும் உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், இன்றைய பங்குச்சந்தையில் 'பாரதி ஏர்டெல்', 'சிப்லா', 'டாக்டர் ரெட்டி', 'ஹெச்சிஎல் டெக்னாலஜி', 'ஹெச்டிஎஃப்சி', 'வங்கி', 'இந்துஸ்தான் லீவர்', 'இன்ஃபோசிஸ்', 'ஐடிசி', 'கோடக் மகேந்திரா வங்கி', 'மாருதி சன் பார்மா', 'டிசிஎஸ்', 'டைட்டன்' உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகிறது.
அதேபோல், 'டாடா ஸ்டீல்', 'டாடா மோட்டார்ஸ்', 'ஐசிஐசிஐ வங்கி', 'ஹீரோ மோட்டார்', 'ஆக்சிஸ் வங்கி', 'அப்புறம்' உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.