நாடு முழுவதும் கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை லட்சத்தை தொட்டுள்ளது. இதில் வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். அதே போல மத்திம வயதைச் சேர்ந்தவர்களும் இரண்டாவது தொற்றில் அதிகளவில் இறந்து வருகின்றனர். இப்படி இறந்தவர்களால் பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதையாகியுள்ளனர்.
அப்படி பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 577 பேர் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது எனக் கூறியுள்ளார்.