Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தேவி போல இருப்பது ஆசிர்வாதம்தான்… வனிதா விஜயகுமார் மகிழ்ச்சி!

கொரோனா தேவி போல இருப்பது ஆசிர்வாதம்தான்… வனிதா விஜயகுமார் மகிழ்ச்சி!
, புதன், 26 மே 2021 (12:55 IST)
கொரோனா தேவியுடன் தன் முகத்தை ஒப்பிடுவது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் கொரோனா என்றாலே மக்கள் அஞ்சி நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் இருகூர் அருகே கொரோனாவை கடவுளாக பாவித்து கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தேவி சிலையை 48 நாட்கள் வைத்து பூஜை செய்து பின் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கோயம்புத்தூர் மக்களை கேலி செய்து நெட்டிசன்கள் மீம்களை கிரியேட் செய்து பரப்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வனிதா விஜயகுமார் ‘கொரோனா தேவியுடன் என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியே. அந்த மீம்ஸ்களை நண்பர்கள் பலர் எனக்கு அனுப்பினார்கள். நானும் குழந்தைகளும் அதை ரசித்தோம். பலருக்கும் என்னை பார்க்கிற மாதிரி இருந்தது பெரிய விஷயம். இது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம்தான். அதனால் அந்த மீம்ஸ்களை பாசிட்டிவாக எடுத்துக்கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரமுத்து விஷயத்தில் மட்டும் அமைதி காப்பது ஏன்? கனிமொழிக்கு சின்மயி கேள்வி!