Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மது போட்டியில் ராவாக உள்ளே தள்ளியவருக்கு நேர்ந்த சோகம்..

Advertiesment
மது போட்டியில் ராவாக உள்ளே தள்ளியவருக்கு நேர்ந்த சோகம்..

Arun Prasath

, செவ்வாய், 21 ஜனவரி 2020 (15:17 IST)
உத்தர பிரதேசத்தில் மது குடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள உகான்பூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதுடைய ராஜேந்திர சிங், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே மது அருந்திக்கொண்டிருக்கையில் அவரது உறவினருக்கு ராஜேந்திர சிங்கிற்கும் இடையே மது பந்தயம் நடந்தது.

அதில் 20 நிமிடத்திற்குள் 4 குவாட்டர் பாட்டில்களை யார் குடிக்கிறாரோ அவர் தான் வெற்றியாளர் என கூறப்பட்டது. இந்நிலையில் இப்போட்டி ஆரம்பித்த 10 நிமிடத்திலேயே நான்கு குவாட்டர் பாட்டில்களை, தண்ணீரே சேர்க்காமல் குடித்து முடித்து பந்தயத்தில் வென்றார் ராஜேந்திர சிங்.

இதனை தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்ற ராஜேந்திர சிங், ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரது மகன் தர்மேந்திரா, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அழைத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார். ராஜேந்திர சிங்கின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ரீபெய்ட் யூசர்களுக்கு வோடபோனின் Long Term ப்ளான்!!