Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முக்கோண வடிவத்தில் பாராளுமன்றம் அமைக்க திட்டம்..

முக்கோண வடிவத்தில் பாராளுமன்றம் அமைக்க திட்டம்..

Arun Prasath

, திங்கள், 20 ஜனவரி 2020 (09:18 IST)
1,350 எம்.பி.க்களுக்கான இருக்கை வசதியுடன், முக்கோண வடிவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாதிரி வரைப்படம் தயாரானது.

வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி என்ற டிசைனிங் நிறுவனம் முக்கோண வடிவத்தில் கட்டுவதற்கான மாதிரி வரைப்படத்தை தயார் செய்துள்ளது.

இந்த கட்டிடம் தற்போதுள்ள பாராளுமன்ற வளாகத்துக்கு அடுத்ததாக அமையும் என கூறப்படுகிறது. இதில் மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரு சபையின் 900 எம்.பி.க்கள் அமர்வதற்காகவும், 1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்வதற்காகவும் ஏற்றதாக கட்டப்படுகிறது.

மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு, 848 எம்.பி.க்கள் இருக்க வேண்டும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி 545 ஆக இருக்கும் மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்த்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எரிமலை சாம்பலில் இருந்து செங்கல் தயாரிப்பு – வித்தியாசமாக யோசித்த அரசு !