அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (15:32 IST)
அகமதாபாத்தில் இன்று ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில், தற்போது வந்துள்ள தகவலின்படி குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது விமானம் விழுந்த  இடம் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே இருப்பதால், பல வீடுகளும் தீக்கிரையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த விமான விபத்தில்  பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களில் ஏழு குழந்தைகள் இருந்ததாகவும், அதில் இரண்டு பேர்கள் புதிதாக பிறந்த குழந்தைகள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த விவரம் பலருடைய மனத்தையும் கலங்கடித்துள்ளது.
 
மேலும் இன்று பிற்பகல் 1.38 மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்ட விமானம், புறப்பட்டதும் ஒரே நிமிடத்தில் அதாவது 1.39 மணிக்கு அவசர சிக்னல் அனுப்பியது. அதன் பிறகு எந்த தொடர்பும் ஏற்படவில்லை. ஒரு நிமிடத்தில் நிகழ்ந்த இந்த பேரழிவு, நாட்டையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கடற்கரையை 25 கி.மீ. வரை டிட்வா புயல் நெருங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் திறப்பு!

Cyclone Ditwah: டிட்வா புயல் எதிரொலி!.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்!...

நெருங்கி வரும் டிட்வா புயல்.. சென்னை உள்பட பல பகுதிகளுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை..!

30 மணி நேரம் தொடர் மழை!.. தூத்துக்குடி, நெல்லையில் கடும் குளிர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments