விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (15:22 IST)
அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து, நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி பயணித்ததாக பரவும் தகவல், பரபரப்பை அதிகரித்திருக்கிறது.
 
ஏர் இந்தியா நிறுவனம் இயக்கிய AI171 என்ற விமானம், அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே  அதாவது மதியம் 1:38 மணியளவில், விமானம் மேகானி நகர் மற்றும் கோடா முகாம் பகுதிக்குள் உள்ள ஒரு குடியிருப்பு மாடிகட்டிடத்தின் மேல் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கு பின் அந்த இடம் கரும்புகையால் சூழப்பட்டது.
 
விமானத்தில் 230 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது காயங்களின் விவரம் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை.
 
விபத்து தகவல் வெளியாகியவுடன், பிரதமர் நரேந்திர மோடி, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில அரசுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
 
இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி இருந்ததாக கூறப்படுகிறது, ஆனால் இதுவரை அந்த தகவலை அதிகாரப்பூர்வமாக எவரும் உறுதி செய்யவில்லை.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments