சீன பட்டாசுகளை வாங்கினாலோ, விற்றாலோ அதற்குறிய தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிவகாசியில் பட்டாசு தொழில் நலிவடைந்து வருவதாகவும், சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் திண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அதிக நச்சுத்தன்மை கொண்டதாக கருதப்படும், மிகவும் குறைந்த விலையிலானதுமான சீன பட்டாசுகளை சட்ட விரோதமாக இங்கே இறக்குமதி செய்து விற்பனை செய்வதாக ஆங்காங்கே புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சீன பட்டாசுகளை சட்ட விரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதை மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சுங்கத்துறை முதன்மை கமிஷ்னர், “பட்டாசுகள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால், சீன பட்டாசுகளை கொண்டு சென்றாலோ, வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, 1962-ன் கீழ் தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
சீன பட்டாசுகள் சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு, லிதியம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ரசாயனங்களை கொண்டுள்ளதால், அது மிகவும் ஆபத்தான ஒன்றாக கருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.