Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்களித்தால் மார்க் போடுவோம் - தனியார் பள்ளிகள் அறிவிப்பு

Advertiesment
வாக்களித்தால் மார்க் போடுவோம் - தனியார் பள்ளிகள் அறிவிப்பு
, சனி, 5 மே 2018 (19:21 IST)
தேர்தலில் வாக்களித்த பெற்றோரை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அழைத்து வந்தால் மதிப்பெண் வழங்குவோம் என கர்நாடக மாநிலத்தில் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.

 
கர்நாடகாவில் வருகிற 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அம்மாநில தனியார் பள்ளிகள் வித்தியாசமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது.
அதாவது, வாக்களிக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. அதாவது, தந்தை வாக்களித்தல் 2 மதிப்பெண்ணும், தாய் வாக்களித்தால் 2 மதிப்பெண்ணும் மொத்தம் சேர்த்து 4 மதிப்பெண்களும் வழங்கப்பட இருக்கிறது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த கர்நாடக மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மை கழக பொதுச்செயலாளர் ஷஷிகுமார் “வாக்களித்த பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வந்து, வாக்களித்த மையை காண்பிக்க வேண்டும். அப்படி செய்தால் இண்டர்னல் அசஸ்மெண்ட் மதிப்பெண் வழங்கும்போது 4 மதிப்பெண்கள் வழங்குவோம். நாங்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானவர்கள் கிடையாது. வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு. அதேபோல், வாக்களித்த பெற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசும் வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் அகதி குடும்பத்திற்கு துணை நிற்கும் ஆஸ்திரேலியர்கள்