Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் அகதி குடும்பத்திற்கு துணை நிற்கும் ஆஸ்திரேலியர்கள்

Advertiesment
தமிழ் அகதி குடும்பத்திற்கு துணை நிற்கும் ஆஸ்திரேலியர்கள்
, சனி, 5 மே 2018 (18:10 IST)
குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியர்கள், ஒரு தமிழ் அகதி குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக போராடி வருகின்றனர்.



கடந்த மே 2 ஆம் தேதி பெடரல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்க விசாரணைக்கு வந்த போது, இவர்கள் ‘பிரியா- நடசேலிங்கம்’ என்ற அத்தமிழ் குடும்பத்தின் புகைப்படங்களுடன், அவர்கள் நமது மக்கள் என்ற முழக்கங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே சமயம், இவ்வழக்கு தொடர்பான இறுதி முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2018யில் பிரியாவின் இணைப்பு நுழைவு-விசா(Bridging Visa) காலாவதியான நிலையில், ‘பிரியா- நடேசலிங்கம்’ என்ற இணையர் குயின்லாந்த்-ல் உள்ள அவர்களது வீட்
 
டிலிருந்து ஆஸ்திரேலிய எல்லைப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பிரியா மற்றும் நடேசலிங்கத்துடன் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், பெரும் போராட்டத்திற்கு அதிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களின் கைதை எதிர்த்து ‘62,000 பேர் கையெழுத்திட்ட இணைய மனு’ அவர்களை மீட்கத் துணைப் புரிந்தது.

கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலிய வந்த நடேசலிங்கமும், 2013 யில் வந்த ஆஸ்திபிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டு, பிலோயலா (Biloela)  என்ற சிறநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.

‘பிரியா- நடேசலிங்கம்’ நிலைத் தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த தமிழ் அகதிகள் கவுன்சிலின் பேச்சாளர் பென் ஹில்லர், “எல்லைப்படை எடுத்த நடவடிக்கை கொடூரமான, கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். அக்குடும்பத்தின் மனு மீண்டும் மீளாய்வு செய்யப்பட வேண்டும். தருணிகா மற்றும் கோபிகா ஆஸ்திரேலியாவிலேயே பிறந்தவர்கள். இதுவே அவர்களது இல்லம், அவர்கள் இலங்கைக்கு சென்றதோ அவர்களிடம இலங்கைக் குடியுரிமையோ கிடையாது. இலங்கையிலிருந்து 2000ம் ஆண்டு வெளியேறிய பிரியா, கடந்த 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உள்ளார். அவர் இலங்கையைவிட்டு வெளியேறி 18 ஆண்டுகளாகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த நடேசலிங்கமும் இலங்கையில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நாடுகடத்தப்படுவது தொடர்பான முடிவு நீதிமன்றத்தின் கையில்  உள்ள போதிலும், ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனை தலையிடக் கோருகிறார் அக்குடும்பத்தின் ஆஸ்திரேலிய நண்பரான ஏஞ்சிலா பிரடெர்க்ஸ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தனை திவாகரன் வந்தாலும் தினகரனை அசைக்க முடியாது - செந்தில் பாலாஜி பேட்டி