ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

Siva
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (18:03 IST)
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசித்தி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் அடங்குவர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்தில், 220-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்த மேக வெடிப்பு, மாச்சில் மாதா யாத்திரை செல்லும் பாதையில் நிகழ்ந்ததால், யாத்திரை சென்ற பக்தர்களும் சிக்கியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிகள், யாத்திரை சென்ற பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்படுவதையும், திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் காண்பிக்கின்றன. 
 
பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில் "கிஷ்த்வாரில் மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உண்டு என கூறியுள்ளார். மேலும் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று பிரதமர் உறுதியளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments