Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் மகளை திருமணம் செய்ய முயற்சித்த 32 வயது நபர் கைது

Advertiesment
சச்சின் மகளை திருமணம் செய்ய முயற்சித்த 32 வயது நபர் கைது
, ஞாயிறு, 7 ஜனவரி 2018 (23:47 IST)
சச்சின் தெண்டுகல்கரின் மகள் சாராவை திருமணம் செய்து கொள்ள விரும்பி அவருக்கு போன் மூலம் தொல்லை கொடுத்த 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 32 வயது நபர் தேப்குமார் மெயிட்டி. இவர் படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றி கொண்டிருக்கின்றார். சமீபத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தபோது சச்சினுடன் அவரது மகளையும் பார்த்துள்ளார். அதுமுதல் மானசீகமாக சாரா மீது காதல் கொண்ட இந்த நபர், சச்சின் தெண்டுல்கரின் வீட்டு லேண்ட்லைன் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து சாராவுக்கு தொலைபேசி மூலம் தொல்லை கொடுத்துள்ளார்

இதுகுறித்து செய்யப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் சாராவுக்கு தொல்லை கொடுத்த தேப்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் சச்சின் மகளை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அதனால் தான் போன் செய்ததாகவும் கூறியுள்ளார். அவருடைய குடும்பத்தினர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும், எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவை கலாய்த்து விளம்பரம் செய்த பிரபல டாக்சி நிறுவனம்