சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல அதிசயங்கள் நடந்தன. 50 ஆண்டுகால திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும், ஒரு சுயேட்சையிடம் தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி திமுக, இந்த தேர்தலில் டெபாசிட்டையும் இழந்தது
மேலும் நாட்டை ஆளும் தேசிய கட்சியான பாஜகவின் வேட்பாளர் டெபாசிட் இழந்தது மட்டுமின்றி நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றார். இதனால் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள்ளது.
இந்த நிலையில் டிராப்டாக்சி என்ற நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. தாமரை போல, நோட்டாவை விட குறைவாக வெளியூர் டாக்சி கட்டணங்கள் என்று கூறி விளம்பரம் செய்துள்ளது. இந்த விளம்பரம் பாஜகவின் ஆதரவு பத்திரிகையான துக்ளக் பத்திரிகையில் வெளியாகியுள்ளது தான் இன்னும் அதிர்ச்சியான தகவல்
இந்த விளம்பரத்தை அகற்ற வேண்டும் என்று பாஜக மேலிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.