Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே மேடையில் ரஜினியும் சரவணா ஸ்டோர் ஓனரும்: அரசியலிலும் தொடருமா?

Advertiesment
ஒரே மேடையில் ரஜினியும் சரவணா ஸ்டோர் ஓனரும்: அரசியலிலும் தொடருமா?
, வெள்ளி, 5 ஜனவரி 2018 (23:15 IST)
சென்னையின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன், கடந்த சில வருடங்களாக தன்னுடைய கடை விளம்பரத்தில் ஹன்சிகா உள்பட முன்னணி நடிகைகளுடன் நடித்து வருகிறார். விரைவில் இவர் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் வதந்திகள் பரவின

இந்த நிலையில் இன்று இரவு மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவின் ஒரு பகுதியான நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் அறிமுக விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியும், சரவணா ஸ்டோர் சரவணன் ஆகிய இருவரும் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

மேலும் இந்த விழாவில் ரஜினிக்கு அருகில் சரவணனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விழாவின்போது இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. போகிற போக்கை பார்த்தால் ரஜினியின் கட்சியில் சரவணன் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் விசுவாசம்' படத்தில் சிம்பு இசையா?