Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமாவாசை அன்று இறந்தால் மோட்சம்: மூட நம்பிக்கையால் தற்கொலை செய்த 3 இளைஞர்கள்!

Advertiesment
அமாவாசை அன்று இறந்தால் மோட்சம்: மூட நம்பிக்கையால் தற்கொலை செய்த 3 இளைஞர்கள்!
, திங்கள், 23 நவம்பர் 2020 (07:27 IST)
அம்மாவாசை அன்று உயிரிழந்தால் மோட்சம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையை நம்பி மூன்று இளைஞர்கள் ஒரு மரத்தின் கீழ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஷஹாபூர் என்ற பகுதியில் உள்ள வனப்பகுதியில் மூன்று இளைஞர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தது இரண்டு நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள் அமாவாசை தினத்தன்று மரணமடைந்தால் நேரடியாக மோட்சம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையை நம்பி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது
 
தற்கொலை முயற்சிக்கு மொத்தம் 4 பேர் முயன்றதாகவும் கடைசி நேரத்தில் ஒருவர் மட்டும் முடிவை கைவிட்டு தூக்கில் தொங்காமல் தப்பித்ததாகவும், அவரின் மூலம்தான் இந்த விஷயங்கள் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் தற்கொலைக்கு முன் மூவரும் மரத்தின் கீழே அமர்ந்து மது அருந்தி விட்டு அதன் பிறகு தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த சேலைகளில் தூக்கில் தொங்கிய தெரிகிறது. இருப்பினும் இந்த மரணங்கள் சந்தேக படும்படியான மரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
 
அமாவாசை அன்று இறந்தால் நேரடியாக மோட்சம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையை நம்பி மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கரையை கடக்கும் நிவர் புயல்: சென்னைக்கு பாதிப்பா?