Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய எவ்வளவு நாள் ஆகும் ? நீதிமன்றம் கேள்வி!

Advertiesment
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய எவ்வளவு நாள் ஆகும் ? நீதிமன்றம் கேள்வி!
, புதன், 18 நவம்பர் 2020 (18:21 IST)
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய எவ்வளவு நாள் ஆகும் என்று மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஒன்றான ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே சமூக நல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விளையாட்டால் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு வருவது தொடர்கதையாக உள்ளது . இதனால் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து இது சம்மந்தமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழக அரசு இந்த விளையாட்டை தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள் ‘இந்த விளையாட்டுகள் பல உயிர்கள் பலியாகின்றன. பிரபலங்களே இதற்கு விளம்பரம் செய்கின்றனர். ஆகவே விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை தட செய்ய அல்லது அதற்கான சட்டம் இயற்றுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏடிஎம் மெஷினில் கள்ளநோட்டுகளை போட முயன்ற நபர் – அலாரம் அடித்ததால் வங்கி ஊழியர்கள் அலர்ட்!