இந்திய தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக முறைகேடுகள் செய்வதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டிய பரபரப்பு குறைவதற்குள், தேஜஸ்வி யாதவும் களம் இறங்கியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாநில சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்துள்ளதாக ராகுல்காந்தி வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பீகாரில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அதில் அவர் “பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ஒரு பெரிய மோசடி என்று பலமுறை கூறி உள்ளோம். பீகார் துணை முதல் அமைச்சர் விஜய்குமார் சின்ஹாவுக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளது. இவை இரண்டு வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகளில் இருக்கின்றன.
இது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் உள்ளது. எனவே யார் மோசடி செய்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்தம் மோசடியானது அல்லது பீகார் துணை முதல்வர் மோசடி செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K