Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலூர் ரயில் விபத்து எதிரொலி! புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய ரயில்வே அமைச்சர்!

Advertiesment
Cuddalore train accident

Prasanth K

, வியாழன், 10 ஜூலை 2025 (09:41 IST)

கடலூரில் பள்ளி வேன் ரயிலுடன் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த விபத்திற்கு ரயில் கேட்டை மூடாமல் இருந்த கேட் கீப்பரே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து கேட் கீப்பரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி, அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அதற்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ரயில்வே கேட்களை இண்டர்லாக்கிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டும். இண்டர் லாக்கிங் முறையில் இல்லாத ரயில்வே கேட்களை தினமும் சோதனை செய்ய வேண்டும்.

 

இண்டர்லாக்கிங் இல்லாத பகுதிகளில் ரயில் வருவதை ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். நாட்டில் எங்கெங்கு பொதுமக்களே மூடி திறக்கும் வகையில் ரயில்வே கேட்கள் உள்ளன என்பதை கணக்கெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.’

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்வு.. கிரிப்டோ சந்தையில் குவியும் முதலீடுகள்..!