Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

26/11 மும்பை தாக்குதலின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம்!

26/11 மும்பை தாக்குதலின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம்!
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:25 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

 
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் அதிபயங்கரமாக சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். 
 
இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். மேலும், நான்கு நாட்கள் மும்பையை தங்கள் கட்டுப்பட்டிற்குள் வைத்திருந்தனர். 
webdunia
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைவரும் சுட்டு கொல்லப்பட்டனர். பின்னர், அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார்.  இந்த தாக்குதல்கள், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று விசாரணையின் போது அவர் ஒப்புக் கொண்டார். விசாரணைக்கு பின்பு அஜ்மல் கசாப்பும் தூக்கிலிடப்பட்டான்.
 
அந்த தாக்குதலின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி மும்பை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் பணியே... எனக்கான பரிசு - கழகத்தினருக்கு உதயநிதி கோரிக்கை!