ஐதராபாத் நகரில் இன்று 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் சந்திரசேகரராவ் திறந்துவைக்க உள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சாசன சட்டத்தை இயற்றியவரும் இந்திய அரசியல் சாசன சிற்பி என்றழைக்கப்படுபவர் டாக்டர் அம்பேத்கர்.
தெங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் அம்பேத்கருக்கு இந்தியாவில் மிகவும் உயரமான சிலை 125 உயரத்தில் அமைக்ககப்பட்டுள்ளது.
ரூ.146 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட சிலை மற்றும் தெலுங்கானா மா நிலத் தலைமைச் செயலகக் கட்டிய பணிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்துவைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி 2 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், அம்மா நிலத்தில் உள்ள 119 தொகுதிகளைச் சேர்ந்த 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.