Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாமிருவர் நமக்கிருவர் கொள்கை உடையவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை: எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

Advertiesment
நாமிருவர் நமக்கிருவர் கொள்கை உடையவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை:  எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!
, சனி, 1 ஏப்ரல் 2023 (16:57 IST)
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கொள்கை கொண்டவர்களுக்கு மட்டுமே இந்து தேசத்தில் வாக்குரிமை இருக்கும் என்றும் நாம் ஐவர் நமக்கு 50 பேர் என்ற கொள்கை உடையவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்றும் பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது. 
 
சமீபத்தில் ராம நவமி விழா ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற போது இந்த விழாவில் பாஜக எம்எல்ஏ ராஜா என்பவர் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய போது ’இந்தியா இந்து தேசமாக மாறினால் இங்கு நாம் இருவர் நமக்கு இருவர் கொள்கை உடையவர்கள் மட்டுமே வாக்குரிமை இருக்கும் என்றும் நாம் ஐவர் நமக்கு ஐம்பது பேர் என்ற கொள்கை உடையவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்றும் தெரிவித்தார் 
 
இந்து ராஜ்ஜியம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே துறவிகள் ஒரு பார்வையை உருவாக்கி வைத்துள்ளனர் என்பதும் அதற்கான அரசியல் சாசனம் வகுத்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்து ராஷ்டிரத்தின் தலைநகராக டெல்லி இருக்காது என்றும் காசி, மதுரா அல்லது அயோத்தி ஆகிய நகரங்களில் ஒன்றுதான் இருக்கும் என்றும் இந்து ராஜ்ஜியத்தில் விவசாயிகளுக்கு வரி கிடையாது, பசுவதை கிடையாது, மதமாற்றம் கிடையாது என்றும் பேசினார்.
 
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர் போராட்டம்