அதிமுக ஒன்றாக இருப்பதே அனைவரின் விருப்பம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஓபிஎஸ் –ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக இருந்தது.
இதையடுத்து, சில வருடங்களாக ஒன்றாக இணைந்து செயல்பட்ட ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதிமுகவில் இருந்து ஒபிஎஸ்-ஐ நீக்கி எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டது.
சமீபத்தில், வெளியான நீதிமன்றத் தீர்ப்பின்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து, ஓபிஎஸ் தரப்பு விமர்சித்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா கூறியதாவது:
சாதி பார்த்திருந்தால், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் அமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்.
அதிமுகவின் எல்லோரையும் ஒருங்கிணைப்பேன். எல்லோரையும் ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.