100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

Mahendran
திங்கள், 17 நவம்பர் 2025 (10:45 IST)
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள வசாய் பகுதியில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்த ஆறாம் வகுப்பு மாணவி காஜலுக்கு ஆசிரியர் அளித்த கடுமையான தண்டனையே அவரது உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.
 
நவம்பர் 8ஆம் தேதி, பள்ளிக்கு தாமதமாக வந்த காஜலையும் மற்ற மாணவர்களையும் புத்தக பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம் போடும்படி ஆசிரியர் தண்டித்துள்ளார். இந்த தீவிர தண்டனைக்கு பிறகு வீடு திரும்பிய காஜலுக்கு உடல்நலம் மோசமடையவே, அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
காஜலுக்கு ஏற்கெனவே ஆஸ்துமா நோய் இருந்ததாகவும், புத்தக பையின் அதிக எடையுடன் தோப்புக்கரணம் போட்டதாலேயே அவருக்கு உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிக்கு அளித்த கொடூரமான தண்டனையே மரணத்திற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பொங்கல் பண்டிக்கைக்காக டிசம்பர் 15 முதலே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

சென்னையில் தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? இன்றைய ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments