சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

Mahendran
திங்கள், 17 நவம்பர் 2025 (10:41 IST)
புனித யாத்திரை சென்ற இந்தியர்களுக்கு சவூதி அரேபியாவில் பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த 42 பேர், மதினா அருகே நடந்த கோரப் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
 
நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் மெக்காவிலிருந்து மதினா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, முஃப்ரிஹாத் பகுதியில் டீசல் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்த எரிந்ததில், பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நிலையில், 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
பலியானவர்களில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் அடங்குவர். இறந்தவர்கள் பெரும்பாலும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. விபத்தின் தீவிரத்தால் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதால், சடலங்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரேயொருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.
 
இச்சம்பவம் குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வேதனை தெரிவித்ததுடன், விபத்தில் சிக்கிய தெலங்கானா மாநிலத்தவர் குறித்த விவரங்களை சேகரித்து, சவூதி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படச் செயலாளர்களுக்கும் காவல்துறை தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பொங்கல் பண்டிக்கைக்காக டிசம்பர் 15 முதலே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

சென்னையில் தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? இன்றைய ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments