Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

Advertiesment
Fauja Singh

Prasanth K

, செவ்வாய், 15 ஜூலை 2025 (09:44 IST)

உலகின் மிக வயதான ஓட்டப்பந்தய வீரர் என புகழ்பெற்ற இந்தியாவை சேர்ந்த பௌஜா சிங் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பௌஜா சிங். தனது மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த பௌஜா சிங்கிற்கு ஒரு பெரும் சோகம் நடந்தது. அவரது 89 வயதில் அவரது மனைவியும், மகனும் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட, அது பௌஜா சிங்கின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டது.

 

தனக்கென யாரும் இல்லாத நிலையில் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர மிகவும் கஷ்டப்பட்ட பௌஜா சிங், சோகத்திலிருந்து மீள ஓட்டப்பந்தயத்தை கையில் எடுத்தார். தனது 89 வயதில் ஓடத் தொடங்கிய அவர் பல மாரத்தான் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று மக்களிடையே நம்பிக்கைக்கான அடையாளமாக மாறினார்.

 

தற்போது 114 வயதாகும் பௌஜா சிங், வயதானவர் போல அல்லாமல் உற்சாகமான இளைஞராக காலையிலேயே எழுந்து நடைப்பயிற்சி செல்வது என ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். ஆனால் சோகம், அவரது குடும்பத்தாரை போலவே அவரும் இன்று காலை ஒரு துரதிஷ்டமான சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். எனினும் வாழும் காலத்தில் தனது 89 வயதிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய பௌஜா சிங்கிற்கு பொதுமக்கள் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?