Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுத்துறை வங்கிகளில் 1007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

Advertiesment
Bank special officer jobs

Prasanth K

, வெள்ளி, 4 ஜூலை 2025 (09:47 IST)

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி (Special Officer) பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் (IBPS) எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, வங்கிகளில் காலியாக உள்ள 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் எஞ்சினியரிங் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 65 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

 

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாதம் ரூ.48,480 முதல் ரூ85,920 வரை சம்பளமாக பெறுவார்கள்.

 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதன்மை தேர்வு, மெயின்ஸ் மற்றும் நேர்முகத்தேர்வு என்ற மூன்று கட்ட தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பவர்களுக்கு முதற்கட்ட தேர்வு சென்னை, கோவை, கடலூர், மதுரை, நாகர்கோவில், கன்னியாக்குமரி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், ராமநாதபுரம், திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், தர்மபுரி, திருப்பூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும். 

 

முதன்மை தேர்வு எழுதுபவர்கள் பொதுப்பிரிவினர் தேர்வுக்கட்டணமாக ரூ.850-ம், எஸ்சி\எஸ்டி பிரிவினர் ரூ.175ம் செலுத்த வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு https://www.ibps.in/index.php/specialist-officers-xv/

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக தலைவராகிறாரா நிர்மலா சீதாராமன்? போட்டியில் வானதி ஸ்ரீனிவாசன்?