Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவரின் சம்மதத்தோடுதான் உறவு வைத்துக்கொண்டேன் – எம்.ஜே அக்பர் பதிலடி

Advertiesment
M J Akbar says that the relationship with palavi gokai was maintained with his acceptance
, வெள்ளி, 2 நவம்பர் 2018 (17:26 IST)
மீ டூ சர்ச்சையில் சிக்கி தனது அமைச்சர் பதவியை இழந்த எம்.ஜே. அக்பர் தன் மீது புகார் கூறிய அமெரிக்க வாழ் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகாய் குறித்து கருத்து தெர்வித்துள்ளார்.

மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி.பு.காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் முன்னாள் பத்திரிக்கையாளரும் தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீது பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்தனர்.அடுத்தடுத்த புகாரால் எம்.ஜே. அக்பர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இதுபோலவே தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகோய், 23 வயதில் தான், அக்பருடன் இணைந்து பணியாற்றியபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறினார். அவரது பேட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கையில் வெளியானது.

இதையடுத்து இந்த புகார் குறித்து தற்போது பதிலளித்துள்ள எம்.ஜே. அக்பர் ’நான் யாரையும் பாலியல் துன்புறுத்தல் செய்ததில்லை. பல்லவி கோகாயின் சம்மதத்துடனேயே அவரோடு உறவு வைத்துக் கொண்டேன். ஆனால் அந்த உறவால் என் குடும்ப வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த உறவில் இருந்து விலகி விட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் எம்.ஜே. அக்பரின் மனைவி மல்லிகாவும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். ’20 ஆண்டுகளுக்கு முன்னால் தினமும் என் கணவருக்கு பின் இரவுகளில் பல்லவி கோகாயிடம் இருந்து அழைப்பு வரும். அதனால் எங்கள் குடும்ப வாழ்வில் பல பிரச்ச்னைகள் எழுந்துள்ளன. இப்போது பல்லவி எதனால் இப்படி பொய் சொல்கிறார் எனத் தெரியவில்லை’ என கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளசுகளை அதிகரிக்க அமலுக்கு வரும் புதிய திட்டம்!