Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவுக்கு எதிராக இணைகிறோம் –ராகுல், சந்திரபாபு நாயுடு கூட்டணி

Advertiesment
பாஜகவுக்கு எதிராக இணைகிறோம் –ராகுல், சந்திரபாபு நாயுடு கூட்டணி
, வியாழன், 1 நவம்பர் 2018 (17:06 IST)
ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து பொதுவான தளத்தை உருவாக்கப் போவதாக ராகுல் காந்தியும் சந்திர பாபு நாயுடுவும்  கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாகவே பாஜக மீது அதிருப்தி தெரிவித்து வந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார். தற்போது திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இணந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். மேலும் பாஜக வுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணத்து ஜனநாயகத்தையும் காக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது சம்மந்தமாக திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள் நிலையில் இந்த கூட்டணி அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்!