கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 280 இடங்கள் கிடைத்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்
இன்று ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் நடைபெற்ற சிவசேனா பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மேலும் பேசியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கண்டிப்பாக கட்டப்படும் என்ற வாக்குறுதி கொடுத்ததால்தான் பாஜகவுக்கு கடந்த தேர்தலில் 280 தொகுதிகள் கிடைத்தது. ஆனால் ராமர் கோவில் கட்டுவதாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், 2019ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் வெறும் 2 இடங்கள் தான் கிடைக்கும்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியில் இருந்துதான் வர வேண்டும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும்போது மக்களிடம் எழுச்சியை பார்ப்பதால் இதை உறுதியாகா சொல்கின்றேன்' என்று உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.